சவால் விடுத்து நீதிமன்றம் சென்றார் ஷானி

தன்னை இடமாற்றம் செய்ததை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை இன்று (20) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று பதவி ஏற்ற பின்னர் சிஐடி பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர காலி மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடம்மாற்றம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments