சுவிஸ் தூதரகம் மூடப்படலாம்?


சுவிஸ் தூதரக பணியாளர் கைது மற்றும் ஏனைய பணியாளர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுவிஸ் அரசு கடும் சீற்றமடைந்துள்ளது.இதன் பிரகாரம் தனது சிறப்பு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்ப அது முடிவு செய்துள்ளது.
இதனிடையே தொடர்ந்தும் தூதரக பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டால் தனது தூதரக பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவுக்கு சுவிஸ் அரசு வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.தமது தூதரகத்தை மூடி இந்தியாவிலுள்ள தூதரகத்துடன் இணைத்து செயற்படுத்தும் திட்டத்தை தற்போது வருகை தரவள்ள குழுவினரது சிபார்சில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. 
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடன் தலைமையில் ஒரு குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்டர் ப்ரான்ஸிஸ் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையிலேயே முன்னாள் சுவிஸ் தூதுவர் தலைமையிலான குழு இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments