விசாரணைக்கு போனவரை காணோம்:சடலம் மீட்பு!


பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்றவரை காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதனிடையே மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை(14) முதல் காணாமல் போயிருந்த நிலையில்,குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(20) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போய் உயிரிழந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் நானாட்டான் பிரதேச  சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றிய அன்ரனிஸ் நிமால் (வயது-30) என தெரியவந்துள்ளது.

நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில்   கடந்த  சனிக்கிழமை (14) காலை 8  மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.

இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

இதந்த நிலையில் முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வந்ததோடு,குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நறுவிலிக்குளம் பகுதியில் உள்ள பொது மயானப்பகுதியில் உறுக்குழைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலத்தை கண்ட முதியவர் ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே தனது கணவரான அன்ரனிஸ் நிமால் (வயது-30) உடைய சடலமே இதுவென அவரது மனைவி அடையாளம் காட்டினார்

No comments