பதவி எனக்கு முக்கியமல்ல - சஜித்

பதவிகளுக்கு ஆசைப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்யும் நோக்கம் எனக்கு கிடையாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்மலான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,

நான் என்றும் பதவிகளுக்கு ஆசைப்பட்டது கிடையாது. இதனால், கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தவும் நான் என்றும் முயற்சித்தது கிடையாது. பதவிகளை விட, மக்களின் அன்பும் அவர்களின் ஆணையும் தான் எனக்கு முக்கியமாகும்.

இதனை விட பெரிய பதவி நிச்சயமாக இங்கு கிடையாது. மக்களின் அன்பு என்பது ஜனாதிபதி அந்தஸ்தை விட பெரியது. நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தும் மக்களதும், எமதும் கௌரவத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் - என்றார்.

No comments