பிணை வழங்கியதை வரவேற்றது சுவிஸ்
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் பிணையில் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாக சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிசை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் மத்திய வெளிவிவகார அமைச்சு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
Post a Comment