சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று (16) மாலை போலியான ஆதாரங்களை உருவாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை டிசம்பர் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுவிஸ் தூதரக பெண் ஊழியர் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாக அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் சிஐடிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படியே சிஐடியில் ஆஜராகியிருந்த அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments