சுவிஸ் விவகாரம்:ராஜிதவை சிக்க வைக்க முயற்சி!


அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் பெண்ணான சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவ சிகிச்சைக்கென நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல இலங்கை அரசு தடுத்துவருகின்றது.இதனால் சுவிஸ் நாட்டுடனான உறவு சீர்கெட்டுவரும் நிலையில் இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ராஜித நனக்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டுமென மேற்கொள்ளப்பட்ட நாடகமெனவும் விமர்சித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரக அதிகாரி போலியான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments