தெற்காசியாவில் வரலாற்று சாதனை படைத்தது இலங்கை

13-வது தெற்காசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை அணி ஒட்டுமொத்த சம்பியனான தெரிவாகியதுள்ளது.

அத்துடன் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி அதிக தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்ததிருக்கின்றது.

முன்னதாக 1991ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர் அணி 15 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (07) நிறைவுக்கு வந்தது.

மெய்வல்லுனர் போட்டிகளின் 5 ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், இதில் நடைபெற்ற 8 போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதன்படி இறுதிப் போட்டிகளில் இலங்கை (15), இந்தியா (13), பாகிஸ்தான் (4), நேபாளம் (3), மாலைதீவு (1) என முறையே தங்கப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தன.

இதேவேளை இம்முறை இடம்பெற்ற இந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்தியா மொத்தம் 110 தங்கங்கள் உட்பட 214 பதக்கங்களையும், இலங்கை 31 தங்கங்கள் உட்பட 171 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments