போதையில் கார் ஓடி இளைஞன் உயிரை பறித்த பிக்கு

இரத்தினபுரி – பொதுப்பிட்டிய, மிகிந்துதலாவ பௌத்த விகாரையை சேர்ந்த பிக்கு ஒருவர் மது போதையில் காரைச் செலுத்தி தனுஷ (19-வயது) என்ற இளைஞனை கொலை செய்த சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
மேலும் குறித்த விபத்தை ஏற்படுத்திய பிக்குவிடம் சாரதி அனுமதிப் பத்திரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசியல் செல்வாக்கின் மூலம் கைதாகாமல் தப்பித்து வெளியில் சுதந்திரமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் மக்களுக்கு ஒரு சட்டம் மதகுருக்களுக்கு ஒரு சட்டமா என்று மக்கள் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

No comments