யாழிலும் சுவரோவியம்

நாட்டை அழகுபடுத்தும் நோக்கில் சுவரோவியங்கள் வரையும் திட்டம் யாழ்பாணத்தில் BCAS யாழ் வளாகத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது ஓவியம் வரையப்பட்டுள்ளது. இவ்வோவியங்கள் யாழ்ப்பாணத்தின் தொண்மையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் சுவரோவியங்கள் வரையும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேலையில் யாழ் மாநகர எல்லைப்பகுதிக்குள் முதன்முறையாக BCAS யாழ் வளாகத்தினர் யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம், தொண்மை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ் நல்லூர் கந்தசாமி கோவில், பொது நூலகம், சங்கிலிய மன்னனின் சிலை, யாழ் கோட்டையின் மேற்புர தோற்றம், மந்திரி மனை, கந்தர் ஓடை மற்றும் ஏனைய சமய பிரதிபலிப்புக்களையும் கொண்டுள்ளதோடு உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் இலங்கைக்கே உரித்தான முச்சக்கர வண்டி மற்றும் ஆசிய யானை என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.

No comments