இலங்கையில் முதல் டெஸ்ட் சமநிலையில்

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (15) வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இந்த போட்டியில் சீரற்ற காலநிலை அதிகம் தாக்கம் செலுத்தியதால் சில நாட்கள் போட்டி முழுமையாக இடம்பெறாமல் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமது முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு தனது ஆட்டத்தை இடைநிறுத்தி இருந்தது.

இதன்போது அணி சார்பில் ஆட்டமிழக்காமல் தனஞ்சய டி சில்வா 102 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும், ஒசத பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா இவ்விரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தமது இன்னிங்ஸில் ஆடிய பாகிஸ்தான் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 252 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இதன் போது அணி சார்பில் அறிமுக வீரர் அபிட் அலி ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் பாபர் அசாம் 102 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையில் பந்து வீச்சில் கசுன் ராஜித மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர்கள் அபிட் அலி தெரிவாகியிருந்தார்.

No comments