தமிழ் மக்களின் கேடயமாக தமிழ்த் தேசியக் கட்சி

தமிழர்களின் பாதுகாப்பு கேடயமாக நாம் இருப்போம்.

அனைத்து சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு நாம் விடுக்கும் கோரிக்கை, தமிழ் மக்கள் நீங்கள் உங்களால் இயன்றதை செய்ய முன்வர வேண்டும். நாம் எம்மால் முடிந்ததை செய்வோம். நாங்கள் இன்று வீழ்ந்திருக்கலாம் ஆனால் மீண்டும் எழுவோம்.

இவ்வாறு, தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தனது தலைமையில் "தமிழ் தேசியக் கட்சி" என்ற பெயரில் கட்சி ஒன்றை இன்று (15) யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்துப் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.

No comments