உதயமானது ஸ்ரீகாந்தாவின் கட்சி; சிவாஜிக்கு முக்கிய பதவி

தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா தலைமையில் "தமிழ் தேசியக் கட்சி" என்ற பெயரில் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று (15) சற்றுமுன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடக சந்திப்பும் இப்போது நடைபெறுகிறது.

இந்த சந்திப்பின்போது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளராக மூத்த அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிவகுருநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏனைய செயலாளர்களாக இளைஞர்களும், பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் சட்டத்தரணியாக ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிதி, கல்வி, சமூக நல்லிணக்கம் போன்ற செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தேசிய அமைப்பாளராக சில்வஸ்டர் விமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

No comments