புலிகளுடன் ஒன்றாக இருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்

தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன் என்று ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் கட்சியின் விசேட மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார். மேலும்,

தமிழர்களின் சபாமோ தெரியவில்லை எமக்குள் சகோதரப் படுகொலைகள் இடம்பெற்றது. இந்த சகோதரப் படுகொலைகளினால் சிங்களப் பேரினவாதிகள் எள்ளிநகையாடினர். - என்றார்.

மேலும் எமது கட்சிக்குள் பிளவு இல்லை. சிறிய பிரச்சினைகளுக்காக ரெலோ பலவீனமடையாது.

சகோதரப் படுகொலைகளினால் பாதிக்கப்பட்ட போது கூட ரெலோ பலவீனமடையவில்லை. - எனவும் தெரிவித்தார்.

No comments