மேலுமொன்று: தமிழ் தேசியக்கட்சி?


யாழ்.மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் செல்வம் அடைக்கலநாதன் பக்கம் பாய்ந்திருக்க சிறிக்காந்தாவின் தலைமையிலான புதிய கட்சி தமிழ் தேசியக்கட்சி என்ற பெயரில் முளைத்துள்ளது.

டெலோ கட்சியின் யாழ்.கிளையின் கூட்டம், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நாவலர் மண்டபத்தில் ஆரம்பித்து காலை நடைபெற்றிருந்தது.

இதே வேளை கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தலைமையிலான குழு நல்லூரில் உள்ள அவர்களது கட்சி அலுவலகத்திலும் கூடியுள்ளது.

ஏட்டிக்குப்போட்டியாக இரு தரப்புக்களும் கச்கை கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ள நிலையில் அனைத்து மட்டங்களிலும் அது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே ரெலோவும் புலிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ள செல்வம் அடைக்கலநாதன் தமது கட்சிக்குள் பிளவு இல்லை, பாதிப்பும் இல்லை என ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து யாழில் அவசரமாக கூடியுள்ள ரெலோ கூட்டத்தில் வைத்து ஊடகங்களிடையே இவ்வாறு தெரிவுத்துள்ளார்.
Photos:Mathisuddy

No comments