விக்கினேஸ்வரனை உள்ளே தள்ளுக?இனங்களுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து பாரதூரமானது என புதிய சிங்களே தேசிய இயக்கத்தின் தலைவர் டேன் பிரியசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், விக்னேஷ்வரன் தெரிவித்த இந்த கருத்து தொடர்பில் உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என கோரி, அந்த அமைப்பு காவல்துறை தலைமையகத்திலும், குற்றபுலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்துள்ளது.

விக்கினேஸவரன் தெரிவித்துள்ள கருத்தில் தமிழ் மக்களே இலங்கையின் ஆதிக்குடிகள் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments