கிளிநொச்சியிலும் ஆயிரமாம் நாளை தாண்டி போராட்டம்!


வவுனியாவை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று திங்கட்கிழமையுடன் 1017 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை,30ம் திகதி தமது போராட்டத்தின் 1014 ஆவது நாளில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில்; கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுதர வேண்டும் எனத் தெரிவித்துக் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் புகைப்படங்களைக் கைகளில் தாங்கி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments