யாழில் கேலிச்சித்திர நூல் வெளியீடு!


யாழ்.ஊடக அமையத்தின் அனுசரணையுடன் ச.செல்வனின்’காலவரை காட்டூன்கள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் நாவலர் மண்டபத்தில் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றிருந்தது.

ஏற்கனவே மறைந்த கேலிச்சித்திர ஊடகவியலாளர் பயஸ் மற்றும் அஸ்வின் ஆகியோரது நூல்களை வெளியிட்டிருந்த யாழ்.ஊடக அமையம் இம்முறை ச.செல்வனின் ’காலவரை காட்டூன்கள் ’ எனும் நூலை வெளியீட்டுள்ளது.

இதில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். தலைமையுரையினை வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் பிரபாகரன் ஆற்ற நூலின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவன் மற்றும் சி.சிறீதரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

நூலின் ஆய்வுரையை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வழங்கினார்.சிறப்புரைகளை ஊடகவியலாளர் ந.வித்தியாதரன்,கலாநிதி கே.ரி.கணேசலிங்கம்,யாழ்,ஊடக அமைய அமைப்பாளர் உள்ளிட்ட பலரும் ஆற்றியிருந்தனர்.

No comments