புலிகளை தோற்கடித்தது சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்து வெளியேறும் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “உலகில் உள்ள படைகளுக்கு இலங்கை இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.
எனினும் இலங்கை போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை.
ஆனால், அரசியல்வாதிகள் என்ன கூறினாலும் அந்த நாடுகளில் உள்ள இராணுவம் இலங்கை இராணுவம் குறித்து சாதகமான கருத்தைக் கொண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments