மீண்டும் அப்பம் சாப்பிட அலரிமாளிகை போனார் மைத்திரி!

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக,  கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஆகியோருடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகைக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தினார்.
2015 அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதாக அறிவிப்பதற்கு முதல் நாள், 2014 நொவம்பர் 20ஆம் நாள் இரவு கடைசியாக அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார் மைத்திரிபால சிறிசேன.
அப்போது மகிந்த ராஜபக்சவுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு வெளியேறிய அவர், மறுநாள் அவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அதற்குப் பின்னர்அவர் அலரி மாளிகையின் மண்டபத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற போதும், அலரி மாளிகைக்கு செல்லவில்லை.
ஐந்து ஆண்டுகள் கழித்து அலரி மாளிகையில் மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்திய மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலுக்கான வியூகங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை, அதிபருடனும் அவர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

No comments