இலங்கையில் அரச சேவைக்கு பாலியல் லஞ்சம்!


இலங்கையிலுள்ள முதியவர்களில் நான்கில் ஒருவர் இலஞ்சம் வழங்குவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் கண்டறியும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
டிரான்ஸ் பெரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த நாட்டிலுள்ள 72 வீதமான மக்கள் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு இருப்பதை அறியாதவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அசோக ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
அரச சேவையைப் பெற்றுக் கொள்ளச் செல்லும் பெண்களில் 46 வீதமானோருக்கு பாலியல் லஞ்சம் கொடுக்க நேரிடுவதாகவும் அந்த ஆய்வில் அறியவந்துள்ளது.
ஊழல் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ள இந்த ஆய்வானது, ஊழல் தொடர்பில் மக்கள் கருத்தை அறியும் உலகில் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆய்வாக கருதப்படுவதாகவும்  டிரான்ஸ் பெரன்சி இன்டநெசனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர மேலும் கூறியுள்ளார்.

No comments