ஜதேக நாடகமாடுகின்றதென்கிறார் டிலான்!


சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் கடத்தல் சம்பவம் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு கற்பனை நாடகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
வேறு நாடுகளுடன் குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் புதிய ஜனாதிபதி ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே இந்த முயற்சி ஐ.தே.கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சுவிஸ் தூதரகத்தின் கடத்தல் விவகாரம் நன்மை தரும் வகையில் உருவாகிவரும் ராஜதந்திர உறவுகளை சீரழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை நாடகம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

No comments