மண்சரிவால் 45 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா, வலப்பனை-மலபட்டாவ மற்றும் இலுப்பத்தன ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு இன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் தற்காலிகமாக இலுப்பத்தன பிரதேச கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பகுதிகளில் மேலும் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் குறித்த மக்களை  மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை வலப்பனை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

No comments