எல்லயில் மண்சரிவு

பண்டாரவளை-வெல்லவாய பிரதான வீதியில் எல்ல சுரங்கப் பகுதிக்கு அருகாமையில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இவ்வாறு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

எல்ல பிரதேச சபையினர் மற்றும் எல்ல பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மண் மற்றும் முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றினர்.

No comments