ஹட்ரிக் அடித்தார் குல்தீப்

மேற்கிந்திய அணிக்கு எதிராக இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதன்படி இன்றைய போட்டியில் சை ஹோப், ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹட்ரிக் சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இதற்கு முன்னர் 2017ம் ஆண்டு குல்தீப் யாதவ் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அதன்படி இந்திய அணி சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்திய முதல் வீரராக இடம்பிடித்துள்ளார்.

No comments