நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி?


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து பேசும் சூழல் நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி விசனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் உடன் தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை உயர்த்திக் கொண்டு சென்றதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பைத்தியக்காரர்களுக்கே அன்றி வேறு யாருக்கும் கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படிப் போனாலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற ஜனநாயக ரீதியிலான சுயாதீன ஆணைக்குழுக்களை பாதுகாப்பது அவசியமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments