விபத்தில் இளைஞன் மரணம்!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நின்ற மாமரத்துடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட நாரந்தனை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஊர்காவற்துறை - புளியங்கூடல் பகுதியினை சேர்ந்த வி.வசீகரன் (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments