ராஜித இயக்கிய நாடகமே தூதரக ஊழியர் கடத்தல்; கண்டுபிடித்தார் டிலான்

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டது ஐக்கிய தேசிய கட்சியினால் அரகேற்றப்பட்ட நாடகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜக பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

புதிய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசும் விதமாக நடத்தப்பட்ட நாடகமே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரமாகும்.

சுவிஸ் தூதரக ஊழியர் ஐக்கிய தேசிய கட்சி தயாரிக்க ராஜித சேனாரத்ன இயக்கிய நாடகத்தின் நடிகர் மட்டுமே.

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக அரசாங்கத்தால் உச்சபட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார்.

No comments