வடகடல் ஊழலை மறைக்க சாராயம்?


யாழ்ப்பாணத்தில் பாரிய நஸ்டத்துடன் இயங்கும் வட கடல் (நோர்த் சீ) நிறுவனத்தின் ஊழல்கள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.அங்கு இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைக்கு சென்ற அதிகாரிகளிற்கு போத்தல்கள் அள்ளி வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டறயிப்பட்டுள்ளது.

இதனிடையே இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக கற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வட கடல் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் நீரக வள மூலங்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாரிய நஸ்டத்தில் இயங்கி வருகின்ற வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனக்கு கிடைக்கும் தகவல்கள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட கடல் நிறுவனமும் ஊழியர்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், குறித்த நிறுவனம் பாரிய நஸ்டத்தில் இயங்குவதற்கும் உற்பத்தி செயற்பாடுகள் வீழ்ச்சியடைவதற்குமான காரணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போது வட கடல் நிறுவனத்திடம் இருக்கின்ற வளங்களை பயன்டுத்தி மேற்கொள்ளக் கூடிய அதிகபட்ச செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட வட கடல் நிறுவனமானது, 2015 ஆட்சி மாற்றம் வரை அவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் அதிகாரிகளின் அக்கறையீனம் காரணமாக செயற் திறனில் வீழ்ச்சியடைந்ததுடன் கடன் தொகையும் பாரியளவில் எகிறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments