பொதுத் தேர்தலில் பழிவாங்குவேன்- சஜித்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்பி சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் முதற்தடவையாக பொதுமக்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (17) கலந்துகொண்டார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ஒரு பரந்துபட்ட கூட்டணியை வழிநடத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றிகூறும் வகையில் இன்று முதல் நாடு முழுவதிலும் பல்வேறு கூட்டங்களை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

No comments