அல்பேனியா செல்ல முயற்சி- யாழ் வாசிகள் இருவர் கைது!

ஐரோப்பிய நாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21, 30 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments