புதையல் தோண்டிய சகோதரர்கள் கைது!

வவுனியா- பூந்தோட்டம், அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே  சகோதரர்களான 16, 19, 21 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.

No comments