புத்தளத்தில் வெள்ளம்; மக்கள் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று (01) அதிகாலை வரை பெய்த அடை மழை காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் – முந்தல், கல்பிட்டி, ஆனமடு, வண்ணாத்திவில்லு, சிலாபம், மாதம்பை உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பயிர்ச்செய்கைகளும் விவசாய நிலங்களும் வெள்ளநீரிழ் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments