கோத்தா சிறந்த நிர்வாகி; புகழ்கிறார் அங்கஜன்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரட்சியாளனாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் சிறந்தொரு நிர்வாகி என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இன்று (01) யாழிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசும்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாச என்பவருக்கு இருந்த மாபெரும் அலையையும் மீறி யாழில் விழுந்த 23,000 வாக்குகளானது 2,50,000 இலட்சம் வாக்குகளுக்கு சமன்.

நாட்டில் எந்த ஜனாதிபதியும் செய்யாத மாற்றங்கள் இப்போது நடைபெறுகின்றன. இதனால் மக்கள் மத்தியிலும் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எங்களுக்கு அமைச்சு பதவி வழங்கவில்லையென குறை கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதன் ஊடாக யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்புவேன்”

No comments