கூட்டமைப்பு தலைமையில் செயல் திறன் முடிந்துவிட்டது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செயலிழந்துள்ளது எனவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை தேவைப்படுவதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments