நிவாரணத்தில் பாகுபாடு; விசனப்படும் மக்கள்

மட்டக்களப்பு - மாமாங்கம் கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டதால் பாதிக்க பட்ட மக்கள் கிராம சேவகர் அலுவலகத்துக்கு முன்னால் சென்று இன்று (17) தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சுமார் 450 குடும்பங்கள் வசிக்கம் கிராமத்தில் வெறுமனே 45 பேருக்கு மட்டும் உதவிகள் வழங்கியதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பாகுபாடு தொடர்பாக மன்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு  மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

No comments