டக்ளஸை ராஜினாமா செய்ய அழைக்கும் மானஸ்தன் சுமந்திரன்!அடுத்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் சொந்த ஊரிலேயே நிலைகொள்ள தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சந்து பொந்தெல்லாம் அலைந்து திரியும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது டக்ளஸ் முதல் வீ.ஆனந்தசங்கரி வரை சவால் விடுத்துவருகின்றார்.

ஆனால் அரசினையோ அல்லது கோத்தபாயவையோ பற்றி வாயே திறக்காத அவர் மறுபுறம் உள்ளுர் அரசியலில் கடைவிரிக்க திட்டமிட்டு பிரச்சார களங்களை திறந்துவருகின்றார்.

அதிலும் டக்ளஸை கோத்தவுடன் கோபித்து பதவியை ராஜினாமா செய்யவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அதிகாரப்பகிர்வையும் சமஸ்டியையும் கோத்தபாய நிராகரித்துள்ள நிலையில் இனிமேலும் டக்ளஸ் அரசுடன் ஒட்டியிருக்க கூடாதென மானஸ்தன் எம்.ஏ.சுமந்திரன் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments