ஊடகவியலாளரின் கமராவை பறிக்க முயன்ற பொலிஸ்

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று மற்றும் கிளாலி, அரத்திநகர், அல்லிப்பளை பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக மண் அகழும் மற்றும் சட்ட விரோத குழுவிற்கு எதிராக இன்று பளை பிரதேசத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ஏ-9 வீதியின் ஊடாக பயணித்த டிப்பர் வானம் ஒன்றினை மக்கள் மறிக்க முற்பட்ட போது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனையடுத்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர் பரராஜசிங்கம் சுஜீபனின் புகைப்படக் கருவியினை பொலிஸ் அதிகாரி பறிக்க முற்பட்டதோடு செய்தி சேகரிக்க இடையூறையும் விளைவித்துள்ளார்.

No comments