படையினர்,காவல்துறை பின்னணியென்கிறார் சிவாஜி?


வடக்கு, கிழக்கில் நடக்கும் மணற்கொள்ளைக்கு பின்னணியில் இராணுவத்தினரும் இலங்கை காவல்துறையினரும் உள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மணல் எடுத்து செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்ததில் இருந்து, அரச கணிகளுக்குள் மட்டுமல்லாமல் தனியார் காணிகளுக்குள்ளும் மணல் அளவுக்கு அதிகமாக அகழப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுக்கொண்டிருக்கும் பொது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் இது தொடர்பில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதனிடையே அரச ஆதரவுடன் அரங்கேற்றப்படும் மணற்கொள்ளைக்கு எதிராக புதுக்காட்டு சந்தியை தொடர்ந்து ஏ-9 வீதியின்; பளையில் இன்று மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.தமது பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இலங்கை காவல்துறை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தாக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணல் அகழ்விற்கு எதிராக யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னபதாக நாளை புதன்கிழமை கண்டனப் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Photo:Mathi suddy

No comments