வெங்காய அரசியல் - கொண்டல் சாமி

சின்ன வெங்காயம் நேற்றைய தேதியில் கிலோ 200ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் அதிகபட்சமாக கிலோ 150மாக இதுவரை இல்லாத அதிக விலையில் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெங்காய பயன்பாட்டை வெகுவாக குறைந்தக்கொண்டார்கள். அதாவது  கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 05ஆம் தேதி வெங்காயம் இந்திய சந்தையில் 3,00,000 குவிண்டால் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 2019இல் அது 1,17,000குவிண்டாலாக கிட்டதட்ட பாதிக்கும் மேலாக குறைந்திருக்கிறது என்பதே வைத்தே அதன் பயன்பாடு வெகுவாக குறைந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

உடனே மத்திய அரசு வெங்காய விலையை குறைக்க எகிப்து,துருக்கி,நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து  வெங்காயத்தை இறக்குமதி செய்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளிச்சந்தைக்கு 300டன் வெளிநாட்டு வெங்காயம் 25லாரிகளில் வந்திருக்கிறது. ஆகவே இனிவரும் ஒரு சில நாட்களுக்கு இந்த அடர் பழுப்பு நிற வெங்காயம் தமிழகம் முழுமையும் விற்பனைக்கு வந்து விலையும் ஓரளவு குறையுமென்று அரசு சொல்கிறது.

இதுவெல்லாம் சரி, ஆனால் தீடிரென்று வெங்காய விலை இப்படி ஒரு இமாலய அளவுக்கு ஏறியதற்கான  காரணம் என்னவென்று அரசு மக்களுக்கு சொல்லனுமா வேண்டாமா? வெரும் இறக்குமதி செய்தால் மட்டும் போதுமா?  இததனை வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் தானே, உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே வைத்துக் கொண்டு இந்திய மக்களுக்கு வெங்காயத்தை கொடுத்துக்கொண்டிருந்தோம். அதில் எப்படி தீடிரென்று  பிரச்சனை ஏற்பட்டது என்ற கேள்விக்கு மத்திய அரசு இன்று வரை பதில் சொல்லாமல் தட்டுப்பாடு, விலையேற்றம், இறக்குமதி  என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்வதன் நொக்கமென்ன?

அது வேறொன்றுமில்லை மக்களே! அரசின் தவறான விவசாயகொள்கை அம்பலமாகிப்போகும் என்பதால் தான் இதைபற்றி பேச மத்திய அரசு மறுக்கிறது. உண்மையில் வெங்காய விளைச்சலில் ஓரளவு தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருந்து வந்தது. இந்த நிலையில் தான் மத்திய அரசு மரபணு மாற்ற வெங்காயத்தை விவசாயிகளிடம் அதிக விளைச்சல் தரும், குறுகிய காலத்தில் அறுவடை செய்யலாம் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி பாரம்பரிய நாட்டு வெங்காய விவசாயத்திலிருந்து மரபணு மாற்ற வெங்காய விவசாயத்தை நோக்கி விவசாயிகளை தள்ளியது.

உண்மையிலேயே மரபணு மாற்ற வெங்காய விவசாயத்தில் விளைச்சல் அதிகமாகவும் குறுகிய காலத்தில் அறுவடையும் செய்ய முடிந்தது., ஆனால் மிகப்பெரிய பிரச்சனை இந்த வெங்காயங்கள் இந்தியாவின் பருவநிலைக்கு உகந்ததாக இல்லை. அதாவது சேமித்து வைக்கும் திறனும், மழையை  தாங்கும் தன்மையும் இல்லை.

இந்தியாவில் உள்நாட்டு வெங்காய தேவை பூர்த்தி செய்வதில் மாகாராஷ்டிரா, கர்நாடகா தமிழகம் (திண்டுக்கல்) போன்ற மாநிலங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இங்கு பெரும்பான்மையான விவசாயிகள் அரசின் மரபணு மாற்ற வெங்காயத்திற்கு மாறி விட்டார்கள். இந்த நேரத்தில் மேற்ச்சொன்ன மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்த சூழலை இந்த மரபணு மாற்ற வெங்காயத்தால் தாங்குபிடிக்க முடியவில்லை. வெங்காயம் ஆரம்பநிலையிலேயே அழுகி போய் விளைச்சல் முற்றாக இல்லாமல் போய்விட்டது. இதுவே இந்த தீடீர் விலையேற்றத்திற்கான முதன்மை காரணம்.

பாரம்பரிய நாட்டு வெங்காயத்தை 150நாட்கள் சேமிக்க முடியுமென்றால், இந்த மரபணு வெங்காயத்தை 50லிருந்து 70நாட்கள் தான் சேமிக்க முடியும்.  இதுவெல்லாம் சேர்ந்து தான் வெங்காய விலையை கடுமையான உயரத்திற்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது.  இது முழுக்க முழுக்க அரசின் தவறான விவசாய கொள்கையால் ஏற்பட்டிருக்கிற தவறே ஒழிய இதற்கு விவசாயிகளின் மீதோ அல்லது பருவநிலையின் மீதோ பழியை போடுவது அருவருக்கத்தக்க செயல்.

அந்தந்த நாட்டின் மண்வளம், பருவநிலை மாற்றம் மக்களின் வாழ்நிலை இதையெல்லாம் கொண்டு தான் உணவு உற்பத்தியை நிர்ணயிக்க வேண்டுமே ஒழிய, கம்பெனிகளின் லாபவெறிக்கெல்லாம் விவசாயத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் நிகழும்.

No comments