ஸ்டெர்லைட் ஆலை பூட்டியதால்,தூத்துக்குடி காற்றின் தரம் உயர்ந்துள்ளது!

ஸ்டெர்லைட் ஆலை   மூடிய பிறகு குறிப்பிடத்தகுந்த வகையில் தூத்துக்குடி காற்றின் தரம் அதிகரித்துள்ளது என தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை தரவுகள் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 2018ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதாக மத்திய மாசு  கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால்  இயக்கப்பட்டு வரும் மூன்று நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள்  வழியாக தெரிகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய காற்று சோதனை  திட்ட தரவுகளின் படி  ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் தொழில் வளாகத்தில் ஆரோக்கியமற்ற காற்று வீசும் நாட்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு பிறகு பாதிக்கு பாதி குறைந்திருப்பதாக தெரிகிறது.
ஏப்ரல் 2017 தொடங்கி மார்ச் 2018 வரையில் - அதாவது ஸ்டெர்லைட் இயங்கிய வரையில் - காற்றின் தரம் 56 சதவிகிதம் குடுத்தலாக ஆரோக்கியமற்று இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 தொடங்கி மார்ச் 2019 வரை இந்த அளவு 27 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதே இரண்டு காலகட்டங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில்  காற்றின் அளவு இருந்த நாட்கள் 44 சதவிகிதத்திலிருந்து ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு 73 சதவிகிதமாக அதிகரித்தருக்கிறது.

No comments