தொடங்கியது அரசியல் தூக்கி அடிப்புக்கள்?


டக்ளஸ் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுள்ள போதும் தனது அடுத்த தேர்தலிற்கான தயாரிப்புக்களில் மும்முரமாகியுள்ளார்.இதற்கேதுவாக அரச அதிகாரிகளை பந்தாடும் நடவடிக்கைகள் மும்முரமடைந்துள்ளன.

இதன் பிரகாரம் வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியின் சட்டவிரோத மணல் அகழ்விற்கு குடைச்சல் கொடுத்த யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையில் இருந்த க.கனகேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 04:30 மணிக்கு இவ் இடமாற்றல் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது தற்போது இடம்பெறும் மணல் கடத்தலின் மாபியாக்களின்தும் அது சார்ந்த அரசியல் கட்சி ஒன்றின் இயலாமையே இது எனவும் வடமராட்சி கிழக்கு மக்கள் தரப்பில் சொல்லப்படுகின்றது.

இவர் கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேசசெயலராக பணியாற்றிய போது மணற் கடத்தல்காரர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தமைக்காகவே க.கனகேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே அவரது இடத்திற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.சூபிரதீபன் கடமைகளை பொறுப்பேற்கின்றார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக சேவையாற்றி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் மீண்டும் அவர் யாழ்.திரும்பியுள்ளார்.

ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து பல கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முல்லைதீவிற்கு முல்லைதீவிற்கு தூக்கியடிக்கப்பட்ட பிரதீபன் மீண்டும் ஆட்சி மாற்றத்தையடுத்து யாழ்ப்பாணம் திரும்புகின்றமை குறிப்பிடடத்தக்கது.

No comments