மன்னார் பிரதேச சபை பட்ஜட் மீண்டும் தோல்வி!

எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் தலைவர் மொஹமட் முஜாஹீரினால் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் சபையில் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில், இதற்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன்காரணமாக மூன்று மேலதிக வாக்குகளினால் எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

No comments