கூட்டமைப்புடன் கூட்டுக்கு கருணா தயாராம்?


என்னுடன் சேர்ந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வருவார்களாக இருந்தால், அவர்களுடன் சேர்ந்து பயணிக்க நான் தயாராக உள்ளேன் என்று கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதனால் எதுவித நியமனங்கள் சம்பந்தமாகவும் நாடாளுமன்றத்தில் கூட பேசவில்லை.

தேசியம், தேசியம் என்று கதைத்துக் கொண்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இவ்விடயத்தில் ஆணித்தரமாக கூறுகின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவார்களாக இருந்தால் நாங்கள் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். வேண்டுகோளாக விடுகின்றோம் அனைத்து சக்திகளும் ஒன்றுசேர வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது எனவும் கருணா தெரிவித்துள்ளார். 

No comments