தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- போகும் யேர்மனி!
யேர்மனி போகும் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆவது நினைவு வணக்க நிகழ்வு15.12.2019 ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் போகும் தமிழ்ழாலய நிர்வாகி திருமதி மோகனா லோகநாதன் அவர்கள் மங்கள விளக்கேற்றினார்.
தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன் ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த சகோதரன் சுப்பிரமணியம் சிறிகுமரன் ஏற்றி வைத்தார். மலர்மாலை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் உணர்வு பூர்வமாகச் செலுத்தினார்கள்.தொடர் நிகழ்வாக திருமதி சிவகுமாரன் வரதலட்ச்சுமி அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விபரம் அடங்கிய உரை உரையாற்றினார் ,கவிதை, விடுதலை காணங்கள், விடுதலை நடனங்கள் சிறப்பாக இடம்பெற்றது. இறுதியாக தேசிய கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவுபெற்றது.
















































































































Post a Comment