பிரதமர் கதிரையும் சஜித்திற்கு?


எதிர்க் கட்சித் தலைவர் பதவியுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பொறுப்பையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழு தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அக்குழு அறிவித்துள்ளது.
கட்சியை ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின்னர் மறுசீரமைத்து புதிய நோக்கில் அறிமுகம் செய்யுமாறு தெரிவித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்புக் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக ரஞ்ஜித் மத்துமபண்டார, தலதா அதுகோரள ஆகியோர் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments