மெரினா கடற்கரையில் படரும் ஆபத்தான ராட்சதக நுரைகள்!

தமிழகம் சென்னையில் உள்ள பிரபலமான மெரினா  கடற்கரையில்  நச்சுத் தன்மை கொண்ட நுரை படர்ந்துவருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நான்காவது நாளாக கடற்கரையில் நுரை அதிகரித்து வருவதால் ப சுற்றுச்சூழல் சீர்கேட்டை சென்னை எதிர்நோக்கியுள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நுரையின் நச்சுத் தன்மை புரியாமல் குழந்தைகளும் பொதுமக்களும் நுரையில் விளையாடுவது குறித்தும் selfie எடுத்து வருவது பற்றியும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், நுரை மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நச்சுத் தன்மை கொண்ட நுரை கடற்கரை ஓரங்களில் சில கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாக, மீனவர்களிடம் யாரும் மீன்வாங்குவதில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
இது, மீனவர்களுக்குப் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
2017ஆம் ஆண்டிலும் இந்த நேரத்தில், இதேபோல் நேர்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினையால், ஆயிரக்கணக்கான மீன்கள் மடிந்தன.
கொட்டும் பருவமழை காரணமாக, சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் கடலில் கலப்பதே நுரை வரக் காரணமென நிபுணர்கள் கூறுகின்றனர்.
துணி துவைக்கும் சவர்க்காரத் தூள் கசடு, ஏனைய கழிவுகளோடு கலந்து கடலுக்குள் செல்வதே நுரை வரக் காரணமென அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments