தீண்டாமை சுவர் இடிந்து 17 பேர் பலி! நீதி கேடவர்கள் மீது தடியடி;

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். தீண்டாமைச்சுவரைக் கட்டிய உரிமையாளரை கைது செய்ய கோரி பலியான 17 பேரின் உறவினர்கள் போராட்டம் செய்ததால். தீண்டாமைச்சுவர் கட்டிய உரிமையாளருக்கு சாதகமாக போலீஸ் தடியடி நடத்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த குடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், அவர்களுக்கான தொடர்பை துண்டிப்பதற்காக 20 அடி உயரத்திற்கு ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு தீண்டாமை சுவரைப் போன்றே இந்த சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், உரிய பாதுகாப்பான முறையில் தரமாக கட்டப்படாத அந்த கருங்கல் சுவர் இடிந்து விழுந்து சுவரின் அருகிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளின் மீது விழுந்து, வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சுவரில் விரிசல்கள் இருப்பது குறித்து தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் பலமுறை உரிமையாளரிடம் பேசியும், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர் போலீசார்,சாதாரணமாக கலைந்து செல்வதற்கு தடியடி நடத்துவது வழக்கம். ஆனால் ,இந்த தடியடி திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிகிறது.போராட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை நடத்தியிருக்கிறது.பிறகு கைது செய்திருக்கிறார்கள். தமிழ்ப்புலிகள் கட்சியின் தொண்டர்களையும் உயிர் இழந்த 17 பேரின் உறவினர்களையும் விரட்டி,விரட்டி அடித்திருக்கிறது காவல்துறை. 17 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் போராடுபவர்களை காவல்துறை ஒடுக்குகிறதென்றால் இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது? தோழர் நாகை திருவள்ளுவன் மற்றும் போராடிய மக்களை தாக்குவதற்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”என மே பதினேழு இயக்கம் உட்பட பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் குரல் கொடுத்திருக்கிறது . உயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தீண்டாமைச் சுவரைப் போன்ற சுவரை எழுப்பியிருந்த துணிக்கடை உரிமையாளரை கைது செய்து, இறந்த மக்களுக்கு நட்ட ஈட்டினையும் அந்த நபரிடம் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளுனான தொடர்பை துண்டிப்பதற்காக எழுப்பப்பட்டுள்ள அனைத்து தீண்டாமை சுவர்களும் இடித்துத் தள்ளப்பட வேண்டும்.என கோரிக்கைகளுக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,பலியானார்கள் குடும்பத்திற்கு தலா வெறும் ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்திருப்பது பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் கோபம் அடையச் செய்திருக்கிறது .இதுவரை தீண்டாமைச் சுவரை கட்டிய உரிமையாளரை கைது செய்யாமல் இருப்பது சாதியப் பற்றா? எனகே கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

No comments