வன்னியில் தொடரும் வெள்ள அபாயம்?


வன்னியில் தொடரும் அடை மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலுள்ள இரணைமடுக் குளமானது 25 அடியை நெருங்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான கட்டுக்கரை குளமானது அதன் கொள் அளவையும் தாண்டி கடந்த இரு நாட்களாக வான் பாய்கின்றது.
அதேபோன்றே கனகாம்பினை குளமும் 4அங்குலம் வான் பாயத்தொடங்கியுள்ளது. 

மன்னார் மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான கட்டுக்கரை குளமானது அதன் கொள் அளவான 11.5 அடி நீரைத் தேக்கிய நிலையில் தற்போது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கானப்படும் குளங்களின் அளவு அதன் கொள் அளவை நெருங்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முத்தையன் கட்டுக் குளம் 16 அடி 08 அங்குலமாகவும், தண்ணிமுறிப்பு குளம் 15 அடி 10 அங்குலமாகவும், உடையார்கட்டுக் குளம் 23 அடி 08அங்குலமாகவும், மதவாளசிங்கன் குளம் 17 அடியாகவும், விசுவமடுக் குளம் 20 அடி 09 அங்குலமாகவும், கணுக்கேணி குளம் 13 அடி 01 அங்குலமாகவும், மருதமடுக் குளம் 14 அடி 02 அங்குலமாகவும், தட்டாமலைக் குளம் 14 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

No comments