வாயை மூடி இருக்கவும்:கோத்தா சட்டம்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர் ஒருவர் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரபல வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பிரபல பாடகரும் வயலின் வாசிப்பவருமான சித்ரால் சோமபால என்பவரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டமையினால் அங்கிருந்தவர்கள் ஊ கூச்சலிட்டுள்ளனர். இதனால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக குறித்த பாடகர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விஷம பாக, திரைப்படத்தின் முதல்நாள் காட்சி நேற்று வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் திரையிடப்பட்டது.
சிறுவர்களின் உள்ளங்களை புண்படுத்தாத ஆசிரியர் தலைமுறை மற்றும் ஆசிரியர் உள்ளங்களை புண்படுத்தாத சிறுவர் பரம்பரை ஒன்றை தோற்றுவிக்கும் நோக்குடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றினார்.
வளர்ந்த ஒருவரின் ஒரு வார்த்தை எவ்வளவு தூரம் சிறுவர் உள்ளத்தை பாதிக்கக்கூடியது என்பது “விஷம பாக” திரைப்படத்தின் முக்கிய கதையம்சமாக உள்ளது.
உலகின் சிறந்த சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்றுள்ள இத்திரைப்படம், லலித் ரத்னாயக்கவின் இயக்கத்தில் உருவானதாகும்.
மேலும் நிகழ்வில் இத்திரைப்படத்திற்கு பங்களித்தவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபயவினால் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

No comments